இன்றைக்குச் சற்றே இலக்கணம் பேசலாம்.வலைப்பதிவர் விழா 2015இல்,சந்தித்த முனைவர் மெ ய் வேந்தனிடம் "தெலுங்கில் வலி மிகுதல் ,மிகாமை என்பதெல்லாம் உண்டா ?" என்று கேட்டேன் "".இருப்பதாகத் தெரியவில்லை" என்றார் .தமிழ்ப்பயிற்சி குன்றிவரும் தற்காலச் சூழலில் படிப்படியே ,அல்லது விரைவாகத் தமிழிலும் கைவிடப்படலாம் . வலி என்றால் இங்கு வல்லெழுத்து என்பது பொருள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை . அண்மையில் நண்பர் ஒருவர்" பண்டமாற்று+பரிவர்த்தனை"-ஒற்று மிகுமா? என்று கேட்டார் ."நீங்கள் எழுதி வெளிவந்து விட்டதா அல்லது இனிமேல்தான் எழுதப் போகிறீர்களா ?" என்று கேட்டேன் .அவர் "வெளியிட்டால் ஒரு விதி ; இல்லையென்றால் வேறு விதியா ?" என்றார் .
அரங்கேற்று காதை -மாதிரி வினைத்தொகையாகக் கொண்டால் வலி மிகாது .பண்டம் +மாற்று +பரிவர்த்தனை எனப்பகுத்தால் , மாற்று என்பது வினையடி. பண்டமாற்று +பரிவர்த்தனை எனப்பகுத்து 'பண்டமாற்றுதலாகிய /பண்டமாற்றாலாகிய பரிவர்த்தனை என்றால் மிகும் .இங்குப் பண்டமாற்று என்பது ஒருசொல் நீர்மைத்து ;அஃதாவது பெயர்ச்சொல் . ஒத்த தொடர் ஒன்றைப் பார்ப்போம் .பணப்பரிவர்த்தனை -என்பதில் பணம் ஒரு சொல் .அவ்வாறுதான் பண்டமாற்று என்பதும்.

இந்த இடத்தில் வலிமிகுவதுதான் மிகச்சரியானது.
No comments:
Post a Comment