மன்னிக்க! வலைப்பதிவர் விழா 2015 ப்ற்றிய எனது நேற்றைய பதிவில் பின்னணி இசை,முன்னணிப் பாட்டு,இணைய இதழ் வெளியீடு முதலியன பற்றிக்குறிப்பிடத் தவறிப் போயிற்று.அதை விடவும் பதிவில் தட்டெழுத்துப் பிழைகள் நேர்ந்துவிட்டன.காரணம் ஒரு விரல் தட்டச்சு.இனியும் கூட சில நேரலாம்.எல்லாவற்றையும் மன்னிக்க.போகப் போகக் குறையும் என நம்புகிறேன்.பார்ப்போம்.
ஐயா வணக்கம்.
ReplyDeleteதாங்கள் வலைப்பூவில் தொடர்ந்து பதிவிடத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஒருங்கே தோற்றுவிக்கிறது. வலைப்பூவினைப் பொருத்தவரை நாம் ஒரு பதிவில் பிழையெனப் படுமிடத்தை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சேரக்க வேண்டுவனவற்றையும், நீக்க வேண்டுவனவற்றையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
நீங்கள் தொடர்ந்து இயங்குங்கால் இதன் நுட்பம் எளிதில் புலப்பட்டு விடும்.
நாளொன்றிற்கு குறுந்தகவல்களாகவேனும் சில செய்திகளை எழுதிச் செல்ல வேண்டுகிறேன்.
அது, தங்களின் தட்டச்சுப் பயிற்சிக்கும் துணைபுரிவதாகும்.
மிக்க நன்றி.