வெங்கட்சாமிநாதன்.என்னும்
விமரிசனப்போராளி வெ.சா.அவர்களின் மறைவுச்செய்தியை இன்று காலை நாளேட்டில் கண்டேன்.இயல்பாகவே நினைவு
பின்னோக்கிச்சென்றது.நான் 1980களின் தொடக்கத்தில் மார்க்சியத்தின்பால் ஆர்வம்
கொண்டிருந்தேன்.காரணம் என் வர்க்க உணர்வன்று; தமிழ் இலக்கிய மாணவனான நான் அப்போது மார்க்சிய
ஆய்வாளர்களின் –ஆதாரங்களோடு கூடிய தர்க்கரீதியான பார்வையிலும் அவற்றுக்குக் காரணமான
மெய்யியலிலும் கொண்ட ஈர்ப்பேயாகும். இந்த ஈர்ப்புக்குப்
பெரிதும் கைலாசபதியவர்களின் நூல்களே விசையாயிருந்தன.அப்புறம் அதற்குத்தக நிற்க வேண்டும்
என்கிற ஆர்வமும் பிடர் பிடித்து உந்தியது. என் வகுப்புத்தோழரான சௌந்தரபாண்டியன் தம்
ஊராகிய ஒம்பத்து வேலியில் நிகழ்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க்க் கிளைக்
கூட்டமொன்றிற்கு என்னை அழைத்துச் சென்றார் அங்கேதான் முதன் முதலாகக் கம்பீரமிக்க,அவசர
நிலைக் காலத்திலேயே காவல் துறையுடன் கண்ணாமூச்சி ஆடிய ,வர்க்கப் போராட்டமே சரியானது
என்று இன்றளவும் உறுதி தளாராத அதே வேளையில் சுய சாதி மறுப்பாளராக ஆதிக்கச் சாதிகளுக்கு
எதிரான செயல் வீர்ராகத் திகழ்கிற சாகசத்தோழர் அறிவுறுவோன் அவர்களை முதன்முத்லாகச் சந்தித்தேன்.படிப்படியே
தஞ்சைக் கிளை உறுப்பினர்,கிளைச்செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர் என்ற நிலைகளில் அமைப்புக்குள்
இயங்கினேன்.உற்சாகம் கரை புரண்டோடிய காலம் அது.மிக்ச்சில ஆண்டுகளே அமைப்பில் இருந்தேன்.என்
கருத்து வேறுபாடு காரணமாக விலகினாலும்,அறிவார்ந்த, அன்பார்ந்த தோழர்களோடு கொண்ட நல்லுறவு
– விதி விலக்கானோர் இல்லாமல் இருக்க முடியுமா என்ன!-தொடர்கிறது. நானும் வேறெந்த அமைப்பிலும்
சேரவில்லை.
எந்தப் படிப்புப் பழக்கம் என்னைத் த.மு.எ.ச.விடம் கொண்டு சென்றதோ,ஒரு வேளை,அதுவே வேறுபடவும் செய்துவிட்ட்தோ? ஆம். இங்கேதான் தஞ்சை ப்ரகாஷ் வழி, நூல்களால் அறிமுகமான
வெ.சா. வருகிறார்.( வேறு சிலர் மூலம் அறிமுகமான நூல்கள்,நேரடி அனுபவங்கள் முதலியன பற்றியும்
பேச ஆசைதான்.பிறகு பார்ப்போம் )
Thursday, 22 October 2015
வெங்கட்சாமிநாதன்.என்னும் விமரிசனப்போராளி
Monday, 19 October 2015
கூத்தாடிரெண்டுபட்டால்..
Sunday, 18 October 2015
பால் மாடு, மாட்டுப்பால்
நான் மாட்டிறைச்சி
பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. தமிழ் நாட்டில் இப்பொதைக்கு மாட்டிறைச்சி விவகாரத்தால்
உயிர் போய்விடாது என்றே கருதுகிறேன். கொஞ்சம் துணிந்து சொல்லலாம்தான்.என்றாலும் எதற்கு
வம்பு!
Saturday, 17 October 2015
இராமபிரான் தேடிய மோதிரம்.
Tuesday, 13 October 2015
வலி மிகுமா ?
இன்றைக்குச் சற்றே இலக்கணம் பேசலாம்.வலைப்பதிவர் விழா 2015இல்,சந்தித்த முனைவர் மெ ய் வேந்தனிடம் "தெலுங்கில் வலி மிகுதல் ,மிகாமை என்பதெல்லாம் உண்டா ?" என்று கேட்டேன் "".இருப்பதாகத் தெரியவில்லை" என்றார் .தமிழ்ப்பயிற்சி குன்றிவரும் தற்காலச் சூழலில் படிப்படியே ,அல்லது விரைவாகத் தமிழிலும் கைவிடப்படலாம் . வலி என்றால் இங்கு வல்லெழுத்து என்பது பொருள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை . அண்மையில் நண்பர் ஒருவர்" பண்டமாற்று+பரிவர்த்தனை"-ஒற்று மிகுமா? என்று கேட்டார் ."நீங்கள் எழுதி வெளிவந்து விட்டதா அல்லது இனிமேல்தான் எழுதப் போகிறீர்களா ?" என்று கேட்டேன் .அவர் "வெளியிட்டால் ஒரு விதி ; இல்லையென்றால் வேறு விதியா ?" என்றார் .
Monday, 12 October 2015
வேட்டி விளம்பரத்தில் மறைக்கப்பட்ட பெரியார்
பெருந்தலைவர் தந்தை பெரியார்... என்று புகழ் வாய்ந்த தலைவர் பெயர்களை அடுக்கிப் பாடல் வடிவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் திடீரென்று பெரியார் காணாமல் போய்விட்டார்.இது தற்செயலாக நடந்தது என்று நம்ப முடியவில்லை.அறிவியல்/பகுத்தறிவு வாதிகள் மராட்டியத்திலும் கர்நாடக த்திலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;சிலருக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் பெரியார் மறைக்கப்படுவது அவற்றோடு தொடர்புடையது என்று நம்பாமல் இருக்க முடிய வில்லை.
மன்னிக்க! வலைப்பதிவர் விழா 2015 ப்ற்றிய எனது நேற்றைய பதிவில் பின்னணி இசை,முன்னணிப் பாட்டு,இணைய இதழ் வெளியீடு முதலியன பற்றிக்குறிப்பிடத் தவறிப் போயிற்று.அதை விடவும் பதிவில் தட்டெழுத்துப் பிழைகள் நேர்ந்துவிட்டன.காரணம் ஒரு விரல் தட்டச்சு.இனியும் கூட சில நேரலாம்.எல்லாவற்றையும் மன்னிக்க.போகப் போகக் குறையும் என நம்புகிறேன்.பார்ப்போம்.
Sunday, 11 October 2015
நன்றி!
பதியாப்பதிவன் பழந்தமிழிலக்கியங்களில் 'ஊராக்குதிரை','நூலாக் கலிங்கம்' என்றெல்லாம் குதிரை மலையையும் பட்டுத்துணியையும் குறிக்கும் தொடர்கள் வரும்.இவற்றை வெளிப்படை என்பார்கள் உரையாசிரியர்கள். சரியாக ஓராண்டுக்கு முன் வலைப்பக்கம் தொடங்கி ஓரிரு பதிவுகள் போட்டதோடு சரி.அப்புறம் தொடரவில்லை.எனவே, நான் பதியாப்பதிவன்தானே!முரண்தான்.அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்கிற தூண்டுதலைப் புதுகை,'வலைப்பதிவர் திருவிழா-2015' தந்தது.தூண்டுதலையே பதிவாகப்போட்டு விட்டேன். உண்மையில் பெருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.வரவேற்பு,பதிவு,பரிசு,பாராட்டு,அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தரின் அறிவார்ந்த உணர்வுரை,தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநரின் உணர்வார்ந்த அறிவுரை,விக்கிமீடியா இந்தியா,திட்ட இயக்குந்ன்ரின் ஆக்கப் பூர்வ ஆலோசனை யுரை,எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பனுபவப் பகிர்வுரை,(முதன்மைக்கல்வி அலுவலர் உரையை என் காலத்தாழ்வு காரணமாகக்கேட்க இயலாமற் போனது வருத்தத்திற்குரியதுதான்),நூல் வெளியீடுகள்,விற்பனை,வலைப்பதிவர் அறிமுகவுரைகள்,அளவளாவல்கள்,இவற்றுக்கிடையில் தகுதி கேள்விக்குரியதாயினும் அன்பு மிகுதி காரணமாக ஏதோ சில சொல்ல எனக்குக் கிடைத்த வாய்ப்பு,சோர்வக்ற்றும் வடிசாறு(soup),தேநீர்,வகை குன்றாச்சுவையுணவு,முக்கனிகள்(மாங்கனி எப்படி?),பனிக்குழைவு,மாலைச்சிற்றுண்டியாகக்குழிப்ப்ணியாரங்கள்...நிறைவு !நிறைவு!நிறைவு!தோழர் முத்து நிலவன் அவர்களிடம் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.நன்றியை நண்பர் குழாத்திற்குத் தெரிவியுங்கள் என்றார்.நன்றி.
Friday, 9 October 2015
Subscribe to:
Posts (Atom)