Sunday 11 October 2015

நன்றி!

பதியாப்பதிவன்            பழந்தமிழிலக்கியங்களில் 'ஊராக்குதிரை','நூலாக் கலிங்கம்' என்றெல்லாம் குதிரை மலையையும் பட்டுத்துணியையும் குறிக்கும் தொடர்கள் வரும்.இவற்றை வெளிப்படை என்பார்கள் உரையாசிரியர்கள்.                                       சரியாக ஓராண்டுக்கு முன் வலைப்பக்கம் தொடங்கி ஓரிரு பதிவுகள் போட்டதோடு சரி.அப்புறம் தொடரவில்லை.எனவே, நான் பதியாப்பதிவன்தானே!முரண்தான்.அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்கிற தூண்டுதலைப் புதுகை,'வலைப்பதிவர் திருவிழா-2015' தந்தது.தூண்டுதலையே பதிவாகப்போட்டு  விட்டேன். உண்மையில் பெருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.வரவேற்பு,பதிவு,பரிசு,பாராட்டு,அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தரின் அறிவார்ந்த உணர்வுரை,தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநரின் உணர்வார்ந்த அறிவுரை,விக்கிமீடியா இந்தியா,திட்ட இயக்குந்ன்ரின் ஆக்கப் பூர்வ ஆலோசனை யுரை,எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பனுபவப் பகிர்வுரை,(முதன்மைக்கல்வி அலுவலர் உரையை என் காலத்தாழ்வு காரணமாகக்கேட்க இயலாமற் போனது வருத்தத்திற்குரியதுதான்),நூல் வெளியீடுகள்,விற்பனை,வலைப்பதிவர் அறிமுகவுரைகள்,அளவளாவல்கள்,இவற்றுக்கிடையில் தகுதி கேள்விக்குரியதாயினும் அன்பு மிகுதி காரணமாக ஏதோ சில சொல்ல   எனக்குக் கிடைத்த வாய்ப்பு,சோர்வக்ற்றும் வடிசாறு(soup),தேநீர்,வகை குன்றாச்சுவையுணவு,முக்கனிகள்(மாங்கனி எப்படி?),பனிக்குழைவு,மாலைச்சிற்றுண்டியாகக்குழிப்ப்ணியாரங்கள்...நிறைவு !நிறைவு!நிறைவு!தோழர் முத்து நிலவன் அவர்களிடம் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.நன்றியை நண்பர் குழாத்திற்குத் தெரிவியுங்கள் என்றார்.நன்றி.

No comments:

Post a Comment