Thursday 14 August 2014

நவீனத் தமிழ்க்கல்வி, நாவல், உரைநடை

நவீனத் தமிழ்க்கல்வி, நாவல், உரைநடை

எம் பாரதிதாசன் பல்கலைக்கழக முதல் தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் (எழில் முதல்வன்) அவர்களின் ஒரு புது நூலும், இரு நூல்களின் மறு அச்சும் வெளிவந்துள்ளன.
மகாமகோபாத்தியாய .வே. சாமிநாதையரின்மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், ‘என் சரித்திரம்ஆகியவை குருகுலத்தமிழ்க்கல்விப் போக்கை நன்கு பதிவு செய்த நூல்களாகும். அவரே குடந்தைக் கல்லூரி முதலியவற்றில் பணியாற்றிய அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார், என்றாலும் பாடவேளைகள், பாடப்பகுதிகள், பலர் பாடம் நடத்துதல், ஓர் இலக்கணத்தையே பகுதிபகுதியாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நடத்துதல் என்கிற முறையும் அதன் நலந்தீங்குகளும், ஆசிரியரிடையே நிலவிய மனப்பான்மைகளும் உறவுமுறைகளும்  பணியமர்த்த முறைகளும்  பாடம் நடத்தும் விதங்களும் முதலியன போதிய அளவு அனுபவப்பதிவுகளாக வெளிப்படவில்லை.
பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் அவர்களின்நினைவுக் குமிழிகள்ஓரளவு அந்தக் குறையை நீக்குகிறது.
அவர் மாணவராயிருந்த கால, ஆசிரியராய்ப் பணியாற்றிய கால அனுபவங்களை நினைவுக் குறிப்புகளாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்க தனித்தன்மை வாய்ந்ததாகும்.
இந்நூற்கட்டுரைகளின் மற்றொரு சிறப்பு அதன் மொழிநடை. புனைகதைப் பாங்கிலான அவரது உத்தியும் சில சொற்களாலாகிய வாக்கிய எளிமையும் படிப்போரை உடனழைத்துச் செல்கின்றன.
எமனோடு நடக்கும் உரையாடலினூடாகத் தன்வரலாற்றுக் குறிப்புகளை இடைமிடைந்து தத்துவ விசாரமாய் நகரும்எமனுடன் இரண்டரை நாழிகைஎனும் கட்டுரை புதுமைப்பித்தனின்காலனும் கிழவியும்கதையை நினைவூட்டுகின்றது. முடிவு பாரதியின் குயில்பாட்டை நினைவூட்டுகிறது. கட்டுரை இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


தமிழ்(த்துறை) கூறு  நல்லுலகினர் படித்தால் அறிவார்ந்த இன்புறுவர் என்பது உறுதி.

 பேராசிரியரின்நாவல் இலக்கியம், ‘புதிய உரைநடை (சாகித்ய அகாடமி பரிசு பெற்றது), ஆகிய இருநூல்களும் ஏறத்தாழக் கால்நூற்றாண்டுக்குப் பின் மறு அச்சாக வந்துள்ளன.
இவை பேராசிரியரால் மீள்நோக்கி வெளியிடப் பெற்றிருக்கலாம் எனினும் இப்போதும் இவை உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை என் முப்பதாண்டுக் கால ஆசிரிய அனுபவத்திலிருந்து உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்போது, ஆயிஷா நடராசன் அவர்களின் படைப்புகள் பற்றி  என் மேற்பார;வையில் ஆராய்ந்து வருகின்ற திரு. . கண்ணன் அவர்கள் இந்த நூல்களைப் படித்துவிட்டு இருளில் கைமின் விளக்கைப் பெற்றதுபோல் முகம் மலர்ந்தார்.
இவை மறுஅச்சாக்கம் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெருமதுரை - 625 001.

               செவ்வியல் தமிழும் அறிவியலும்


செவ்வியல் தமிழும் அறிவியலும்

கடல் பகுதி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மழை நீர் முக்கியப் பங்கு வகிக்கிறதுதூத்துக்குடிக் கடல் பகுதியில் முறையான மழை இல்லைபுன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் தாமிரவருணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது. இப்பகுதியில் உள்ள மற்றொரு ஆறான வைப்பாறு வறண்டு விட்டதுசிறிய நதிகளான கல்லாறு, வேம்பாறு ஆகியவற்றிலும் தண்ணீர் இல்லைஇந்தப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறதுஅத்துடன், இந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணைகளும் கடலுக்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைத்து விடுகின்றனகடலில் கலக்கும் ஆற்று நீரில் உள்ள ஊட்டச்சத்துகள் மீன்களுக்கு உணவாக இருக்கும்தண்ணீர் வரத்து குறைவினால் கடலில் உள்ள மீன்களுக்கான ஊட்டச்சத்து போதிய அளவில் கிடைப்பதில்லைஇதனாலும் மீன்கள் இடம் பெயரும் நிலை உருவாகிறதுஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை காலம்இந்த அக்டோபர் நல்ல மழை கிடையாதுமழை அளவு குறைந்து வருகிறதுஅத்துடன், கடலின் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறதுஇதனால், குறிப்பிட்ட வெப்ப நிலையில் கடல் நீரில் வாழக்கூடிய குதிப்பு மீன் இடம் பெயரத் தொடங்கியுள்ளதுஇதுபோல, கடல்நீரில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றங்கள்; காரணமாக வேறு வகையான மீன்களும் இடம் பெயரக்கூடிய சாத்தியங்கள் உள்ளனஎன்கிறார் சுகந்திதேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட்.
                “மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தண்ணீர் கடலில் சேருவதாலும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை கடலில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் பவளப் பாறைகளை பாதுகாக்க ஓரளவு உதவுகின்றனகடல் நீர் வெப்பமடைதல் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன என்றும் பேட்டர்சன் கூறுகிறார;.
                இவ்விரண்டு கருத்துகளையும் திரு. பொன். தனசேகரன் தம்நிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்எனும் நூலில் (பக். 23-24&38) எடுத்துக் கூறியுள்ளார்.
                தமிழ் நாட்டின் பருவநிலை மாற்றத்தால் மீன் வளம், தேன் வளம், பயிர் வளம் முதலியன குன்றுவதைப் பத்துத் தலைப்புகளில் தெளிவான நடையில் ஆர்வம் தூண்டும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.
                தமிழகத்திலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளவும் தலையிடவும் வேண்டிய சிக்கல்களைக் கொண்டுள்ளது இந்நூல். (Published by Cartilha Books, BFA Journalists colony, Srinivasapuram, Thiruvanmayur, Chennai – 600 041, Rs. 90)சரி. பேட்டர்சனின் இரு ஆய்வு முடிவுகளை மட்டும் காட்டியிருப்பதற்கு என்ன காரணம்?”
நான் தமிழாசிரியனாயிருப்பது தான்
அப்படியென்றால்………”
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
 தானல்கா தாகி விடின்
என்கிற திருக்குறளை அந்த அறிவியலாய்வு முடிவுகள் நினைவூட்டின
உரையாடலை நிறுத்திவிடுகிறேன். இக்குறளுக்கு, “இது நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடும் என்றதுஎன்று உரை வரைகிறார் மணக்குடவர். “பெருமையான கடலில் சங்கு முத்து பவளம் பிறவாது, மழை பெய்யாவிடில்என்பது பரிதியார் உரை. “தன்னியல்பு குறைதலாவது நீர் வாழுயிர்கள் பிறவாமையும் மணி முதலாயின படாமையுமாம்என்பார் பரிமேலழகர். “சமுத்திரத்திற்குப் பெருமை முத்தும் பவழமும் படுவது. வையாசியில் நாயத்துச் சோதியில் மழையிலே முத்துக்கரு; ஐப்பசிமாசத்து பூர்வபக்கத்து மழையிலே பவழத்துக்கரு; ஆதலால் பூமியிலே மழையில்லாவிடத்துச் சமுத்திரமும் பெருமைகுறையும்என்று சற்றே விரிவாகக் கூறுகிறார் ஒரு பழையவுரையாசிரியர்.
திருக்குறள் உரைக்கொத்து ஆசிரியர் வித்துவான் .தண்டபாணிதேசிகர். இக்குறளுரைகளின் பின்,
                வேட்டம் பொய்யாது வலைவளஞ் சிறப்பப்
                பாட்டம் பொய்யாது…………… (நற். 38:1-2)
எனும் நற்றிணைப் பாட்டை ஒப்புமைப் பகுதியாகக் காட்டுகிறாரர்.
                “கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி  மழை பொய்யாது பெய்தலானே வலை வளஞ்சிறப்ப  என்று உரை வரைகிறார் பின்னத்தூர் .நாராயணசாமி ஐயர்.
இவற்றைக் கண்டு சற்றேனும் வியந்து மகிழாமல் இருக்க முடியவில்லை.

               Sunday 10 August 2014

தொல்காப்பியம்- பால.பாடமும் மூல நூலும்


      தொல்காப்பியம் பால. பாடம்எனும் எனது நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. (வெளியீடு : அய்யா நிலையம், 1603 ஆரோக்கிய நகர் 5ஆம் தெரு, EB காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613 006. ரூ. 125/-)
              எனது நூலுக்கு அடிப்படையான நூலைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

(பின்னணி இசை: https://www.youtube.com/watch?v=UR2GszvuTVE)தொல்காப்பிய மரபுரைகளின் தடத்தில்
                புதிய நோக்கு
                புதிய ஆய்வு
                புதிய விளக்கம் என,
-              தமிழ்ப் பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் அவர்களின் ஆய்வுரைகளுடன்.
-              பேராசிரியர் முனைவர் பெ. மாதையன் அவர்களின் பதிப்பாண்மையில் புதிய பின்னிணைப்புகளோடு
            பாவலரேறு . பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை

-              புத்தம் புதிய பதிப்பாக
-              உயர்தரமான தாளில்
-              தெளிவான அச்சாக்கத்தில்
-              உறுதியான கட்டமைப்பில்
-              வலிமையான மேலட்டையுடன்
-              ராயல் ஆக்டேவா வடிவத்தில்
-              உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பில்
-              5 பகுதிகளாக 1800 பக்கங்களில்
-              அதிகாரந்தோறும் இயல்தோறும் கோட்பாட்டு விளக்கங்கள்
-        நூற்பாக்களில் புதிய பாட பேத நுட்பங்கள்.
-              பகுதிதோறும் சூத்திர முதற்குறிப்பு மேற்கோள் முதற்குறிப்புகளுடன்
-              தரத்தை நோக்க மிகக் குறைந்த விலையில் வெளிவந்திருக்கிறது.
       (விலை : 5 தொகுதிகளும் ரூ. 1500/- கழிவும் உண்டு)வெளியீடு :
                            பதிப்புத் துறை
                            பெரியார் பல்கலைக்கழகம்
                            சேலம் - 636 011
                      தொலைபேசி : 0427 - 2345565, 2345857, 2345766
                     Fax: 0427 – 2345565, 2345124
                   Website: www.periyaruniversity.ac.in                   
                   E-Mail: infor@periyaruniversity.net
           Sunday 3 August 2014

பா. மதிவாணன் எழுதிய ”அடிவானம் நோக்கிச் சில அடிகள்” & ”தொல்காப்பியம் பால.பாடம்”- நூல் வெளியீட்டு விழா


தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் முனைவர் பா. மதிவாணன் எழுதிய அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை நூல்களை வெளியிட, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழியல் துறைத் தலைவர் மா. இராமலிங்கம் முதற்படியை பெற்றுக் கொண்டார்.
விழாவில் கவிஞர் நா. முத்துநிலவன் பேசியது: அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் எழுதிய முனைவர் பா. மதிவாணனின் தந்தை சு. பாலசுந்தரத்தை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ச. பாலசுந்தரம் சங்கத் தமிழ் இலக்கியத்தை பின்பற்றியவர். அவரது மகன் மதிவாணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உள்ளார். மதிவாணன் நூல்களில் சமூக பார்வை உள்ளதை பார்க்க முடிகிறது என்றார். விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை பேசியது:
மதிவாணன் புத்தகத்தில் தேசிய பார்வை, பொதுவுடைமை சிந்தனை உள்ளது. அவரது கட்டுரைகளில் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் பார்க்கும் முறை நடைபெற்றுள்ளது என்றார்.
நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு மதுரை செந்தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் அ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்களின் ஆசிரியர் பா. மதிவாணன் ஏற்புரை நிகழ்த்தினார்.இதில் சேக்கிழார் அடிபொடி டி.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


-தினமணி 03/08/2014 (தஞ்சைப் பதிப்பு)

Saturday 2 August 2014

பாவலரேறு ச.பாலசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி & தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூல் அறிமுக விழா


தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் பாவலரேறு ச. பாலசுந்தரம் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூலை முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா வெளியிட, அதை பாவலரேறு ச. பாலசுந்தரம் சகோதரர் ச. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பேசியது:
இனிமையான பேச்சு, அரவணைக்கும் தன்மை, மலர்ந்த முகம் ஆகியவையே பெரியவர் ச. பாலசுந்தரத்தின் சிறப்பியல்புகள்.
ச. பாலசுந்தரம் ஏராளமான நல்ல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் உரை காலம் கடந்தும் நிற்கும். அவர் தமிழால் என்றும் நம்முடன் வாழ்கிறார் என்றார். விழாவில் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சு. பழனியாண்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்த்துறை தலைவர் பெ. மாதையன், புலவர்கள் சி.சிவக்கொழுந்து, க. கோபண்ணா, தங்க. கலியமூர்த்தி, முனைவர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர் பழ. மாறவர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, புலவர் கோ. பாண்டுரங்கன் வரவேற்றார். நிறைவில் புலவர் மா. கந்தசாமி நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளைப் பாவலரேறு ச. பாலசுந்தரம் மகனும் பேராசிரியருமான            பா. மதிவாணன் மற்றும் அய்யா பதிப்பகத்தார் செய்திருந்தனர்.

-தினமணி 02/08/2014 (தஞ்சைப் பதிப்பு)