Thursday 14 August 2014

நவீனத் தமிழ்க்கல்வி, நாவல், உரைநடை

நவீனத் தமிழ்க்கல்வி, நாவல், உரைநடை

எம் பாரதிதாசன் பல்கலைக்கழக முதல் தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் (எழில் முதல்வன்) அவர்களின் ஒரு புது நூலும், இரு நூல்களின் மறு அச்சும் வெளிவந்துள்ளன.
மகாமகோபாத்தியாய .வே. சாமிநாதையரின்மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், ‘என் சரித்திரம்ஆகியவை குருகுலத்தமிழ்க்கல்விப் போக்கை நன்கு பதிவு செய்த நூல்களாகும். அவரே குடந்தைக் கல்லூரி முதலியவற்றில் பணியாற்றிய அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார், என்றாலும் பாடவேளைகள், பாடப்பகுதிகள், பலர் பாடம் நடத்துதல், ஓர் இலக்கணத்தையே பகுதிபகுதியாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நடத்துதல் என்கிற முறையும் அதன் நலந்தீங்குகளும், ஆசிரியரிடையே நிலவிய மனப்பான்மைகளும் உறவுமுறைகளும்  பணியமர்த்த முறைகளும்  பாடம் நடத்தும் விதங்களும் முதலியன போதிய அளவு அனுபவப்பதிவுகளாக வெளிப்படவில்லை.
பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் அவர்களின்நினைவுக் குமிழிகள்ஓரளவு அந்தக் குறையை நீக்குகிறது.
அவர் மாணவராயிருந்த கால, ஆசிரியராய்ப் பணியாற்றிய கால அனுபவங்களை நினைவுக் குறிப்புகளாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்க தனித்தன்மை வாய்ந்ததாகும்.
இந்நூற்கட்டுரைகளின் மற்றொரு சிறப்பு அதன் மொழிநடை. புனைகதைப் பாங்கிலான அவரது உத்தியும் சில சொற்களாலாகிய வாக்கிய எளிமையும் படிப்போரை உடனழைத்துச் செல்கின்றன.
எமனோடு நடக்கும் உரையாடலினூடாகத் தன்வரலாற்றுக் குறிப்புகளை இடைமிடைந்து தத்துவ விசாரமாய் நகரும்எமனுடன் இரண்டரை நாழிகைஎனும் கட்டுரை புதுமைப்பித்தனின்காலனும் கிழவியும்கதையை நினைவூட்டுகின்றது. முடிவு பாரதியின் குயில்பாட்டை நினைவூட்டுகிறது. கட்டுரை இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


தமிழ்(த்துறை) கூறு  நல்லுலகினர் படித்தால் அறிவார்ந்த இன்புறுவர் என்பது உறுதி.

 பேராசிரியரின்நாவல் இலக்கியம், ‘புதிய உரைநடை (சாகித்ய அகாடமி பரிசு பெற்றது), ஆகிய இருநூல்களும் ஏறத்தாழக் கால்நூற்றாண்டுக்குப் பின் மறு அச்சாக வந்துள்ளன.
இவை பேராசிரியரால் மீள்நோக்கி வெளியிடப் பெற்றிருக்கலாம் எனினும் இப்போதும் இவை உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை என் முப்பதாண்டுக் கால ஆசிரிய அனுபவத்திலிருந்து உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்போது, ஆயிஷா நடராசன் அவர்களின் படைப்புகள் பற்றி  என் மேற்பார;வையில் ஆராய்ந்து வருகின்ற திரு. . கண்ணன் அவர்கள் இந்த நூல்களைப் படித்துவிட்டு இருளில் கைமின் விளக்கைப் பெற்றதுபோல் முகம் மலர்ந்தார்.
இவை மறுஅச்சாக்கம் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெருமதுரை - 625 001.

               1 comment:

 1. பேராசிரியப் பெருந்தகை திருமிகு.மதிவாணன் அய்யா அவர்களுக்கு,
  வணக்கம். அய்யா எழில் முதல்வனின் ‘நினைவுக் குமிழிகள், ‘நாவல் இலக்கியம்’, ‘புதிய உரைநடை’ ஆகிய மூன்று நூல்கள் பற்றிய கருத்துகள் அருமையாக கொடுத்துள்ளதற்கு நன்றி.
  manavaijamestamilpandit.blogspot.in
  தயவுசெய்து பார்த்து கருத்திடுக.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்,
  ஆர்.சி.மேனிலைப்பள்ளி,
  திருச்சிராப்பள்ளி.

  ReplyDelete