Thursday, 14 August 2014

செவ்வியல் தமிழும் அறிவியலும்


செவ்வியல் தமிழும் அறிவியலும்

கடல் பகுதி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மழை நீர் முக்கியப் பங்கு வகிக்கிறதுதூத்துக்குடிக் கடல் பகுதியில் முறையான மழை இல்லைபுன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் தாமிரவருணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது. இப்பகுதியில் உள்ள மற்றொரு ஆறான வைப்பாறு வறண்டு விட்டதுசிறிய நதிகளான கல்லாறு, வேம்பாறு ஆகியவற்றிலும் தண்ணீர் இல்லைஇந்தப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறதுஅத்துடன், இந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணைகளும் கடலுக்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைத்து விடுகின்றனகடலில் கலக்கும் ஆற்று நீரில் உள்ள ஊட்டச்சத்துகள் மீன்களுக்கு உணவாக இருக்கும்தண்ணீர் வரத்து குறைவினால் கடலில் உள்ள மீன்களுக்கான ஊட்டச்சத்து போதிய அளவில் கிடைப்பதில்லைஇதனாலும் மீன்கள் இடம் பெயரும் நிலை உருவாகிறதுஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை காலம்இந்த அக்டோபர் நல்ல மழை கிடையாதுமழை அளவு குறைந்து வருகிறதுஅத்துடன், கடலின் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறதுஇதனால், குறிப்பிட்ட வெப்ப நிலையில் கடல் நீரில் வாழக்கூடிய குதிப்பு மீன் இடம் பெயரத் தொடங்கியுள்ளதுஇதுபோல, கடல்நீரில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றங்கள்; காரணமாக வேறு வகையான மீன்களும் இடம் பெயரக்கூடிய சாத்தியங்கள் உள்ளனஎன்கிறார் சுகந்திதேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட்.
                “மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தண்ணீர் கடலில் சேருவதாலும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை கடலில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் பவளப் பாறைகளை பாதுகாக்க ஓரளவு உதவுகின்றனகடல் நீர் வெப்பமடைதல் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன என்றும் பேட்டர்சன் கூறுகிறார;.
                இவ்விரண்டு கருத்துகளையும் திரு. பொன். தனசேகரன் தம்நிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்எனும் நூலில் (பக். 23-24&38) எடுத்துக் கூறியுள்ளார்.
                தமிழ் நாட்டின் பருவநிலை மாற்றத்தால் மீன் வளம், தேன் வளம், பயிர் வளம் முதலியன குன்றுவதைப் பத்துத் தலைப்புகளில் தெளிவான நடையில் ஆர்வம் தூண்டும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.
                தமிழகத்திலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளவும் தலையிடவும் வேண்டிய சிக்கல்களைக் கொண்டுள்ளது இந்நூல். (Published by Cartilha Books, BFA Journalists colony, Srinivasapuram, Thiruvanmayur, Chennai – 600 041, Rs. 90)



சரி. பேட்டர்சனின் இரு ஆய்வு முடிவுகளை மட்டும் காட்டியிருப்பதற்கு என்ன காரணம்?”
நான் தமிழாசிரியனாயிருப்பது தான்
அப்படியென்றால்………”
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
 தானல்கா தாகி விடின்
என்கிற திருக்குறளை அந்த அறிவியலாய்வு முடிவுகள் நினைவூட்டின
உரையாடலை நிறுத்திவிடுகிறேன். இக்குறளுக்கு, “இது நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடும் என்றதுஎன்று உரை வரைகிறார் மணக்குடவர். “பெருமையான கடலில் சங்கு முத்து பவளம் பிறவாது, மழை பெய்யாவிடில்என்பது பரிதியார் உரை. “தன்னியல்பு குறைதலாவது நீர் வாழுயிர்கள் பிறவாமையும் மணி முதலாயின படாமையுமாம்என்பார் பரிமேலழகர். “சமுத்திரத்திற்குப் பெருமை முத்தும் பவழமும் படுவது. வையாசியில் நாயத்துச் சோதியில் மழையிலே முத்துக்கரு; ஐப்பசிமாசத்து பூர்வபக்கத்து மழையிலே பவழத்துக்கரு; ஆதலால் பூமியிலே மழையில்லாவிடத்துச் சமுத்திரமும் பெருமைகுறையும்என்று சற்றே விரிவாகக் கூறுகிறார் ஒரு பழையவுரையாசிரியர்.
திருக்குறள் உரைக்கொத்து ஆசிரியர் வித்துவான் .தண்டபாணிதேசிகர். இக்குறளுரைகளின் பின்,
                வேட்டம் பொய்யாது வலைவளஞ் சிறப்பப்
                பாட்டம் பொய்யாது…………… (நற். 38:1-2)
எனும் நற்றிணைப் பாட்டை ஒப்புமைப் பகுதியாகக் காட்டுகிறாரர்.
                “கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி  மழை பொய்யாது பெய்தலானே வலை வளஞ்சிறப்ப  என்று உரை வரைகிறார் பின்னத்தூர் .நாராயணசாமி ஐயர்.
இவற்றைக் கண்டு சற்றேனும் வியந்து மகிழாமல் இருக்க முடியவில்லை.

               







No comments:

Post a Comment